இயற்கை குமுறுகிறது!!!
வானமே !!!!!
ஏன் அழுகிறாய்?
சமுதாய வன்கொடுமைகளுக்கு
இரையாகும்
அப்பாவி
அடித்தட்டு மக்களின்
அவலநிலையையும்
சுருங்கிப்போன
வயிற்றையும்
சுருக்கில் தொங்கும்
விவசாயிகளையும் கண்டா?
இடியே !!!!
கோபப்பட்டு
முழக்கமிடும்
காரணம் என்ன?
தீவிரவாதம் எனும்
வெடிகுண்டால்
பொசுக்கப்பட்ட
குடும்பங்களையும்
மத, இன, சாதி
வெறியினால்
கொத்துக்கறியாகும்
மானிடர்களின்
அழுகுரல் கேட்டா?
மின்னலே !!!!
ஏன் இந்த பாய்ச்சல்?
அறிவுதரும் கல்விச்சாலை
வியாபாரமானதாலா?
உலகமயமாதலால்
உருக்குலைக்கப்பட்டு
இருண்ட
வாழ்க்கைக்குத்
தள்ளப்பட்ட
குடிசைத் தொழிலாளிகளைப்
பார்த்தா?
அலைகடலே!
ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?
காவி வேட்டிக்காரர்களின்
காமவெறிக்கும்
பில்லி சூனிய வித்தையால்
காசைப் பிடுங்கித்
தின்னும்
சாமியாரையும்
வாழ்வே இலஞ்சமாய்
வறியோரை
வாட்டி வதைக்கும்
அலுவலகப்
பிடுங்கல்களைக்
கண்டா?
இயற்கை குமுறுகிறது!!!!!
மானிடர்கள் குமுறுவது
எப்போது?
ஆ. லொயோலா
No comments:
Post a Comment